இன்றைய ராசி பலன்கள் - 27.03.2026 வெள்ளி கிழமை

By செய்திப்பிரிவு

மேஷம்
நீண்ட நாள் கனவில் ஒன்று நிறைவேறும்.பண தட்டுப்பாடு தீரும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம்
புதிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். பெற்றோர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் இரட்டிப்பாகும்.

மிதுனம்
திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். அலைச்சல் அதிகமாக கணப்படும் உணவு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் உஷ்ண நோய்கள் வரக்கூடும்.பொருளாதாரம் ஏற்ற தாழ்வு இல்லாமல் சமமாக இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடகம்
புது நபர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். பண விவகாரங்கள் கவனம் தேவை யாருக்கும் ஜாமீன் நல்காதீர்கள். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

சிம்மம்
அந்நியர்களால் பண விரயமும் வீண் அலைச்சலும் ஏற்படும்.உடல் உபாதைகளும் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் லாபம் வரும்.

கன்னி
மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொந்தரவு தந்தவர்கள் தானாக விலகுவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும். மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

துலாம்
குடும்ப செல்வாக்கு உயரும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும்.முன் கோபத்தை தவிற்க்கவும் புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும் சொந்த தொழில் மேன்மையடையும்.

விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை வரவேற்பர். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும். மாலை 05:48 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.

தனுசு
தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் உதவிகளும் கிடைக்கும்.அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். மாலை 05.48 முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

மகரம்
நினைத்த வேகத்தில் காரியங்களை செய்ய முடியும். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவார்கள். வேலை மாற்றத்திற்கான முயற்ச்சிகள் தொடங்கலாம்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்பம்
குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். அடுத்தவர் மனசு காயபடும்படி பேச வேண்டாம்.கணவன் மனைவிக்குள் விவாதங்களை தவிற்க்கவும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மீனம்
உற்சாகமாக காணப்படுவீர்கள்.மன மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். பண வருவாய் நன்றாக இருக்கும்.

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE