தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.
உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.
உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் இடத்தில் இருப்பதால் தனவரவுகள் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் மஹாலட்சுமியின் அருள் ஆசிகள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் ஜூன் மாதம் 2-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்துக்கு செல்வது சிறப்பில்லை. தன விரையங்கள் உண்டாகும் கவனம்.
ராகு பகவான் 3-ம் இடத்தில் இருந்து நன்மைகளை வாரி வழங்குவார் மன அமைதியும் சந்தோஷம் கிடைக்கும் எதிர்பாராத தன வரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு +கேது பெயர்ச்சியில் ராகு 2 -ம் இடத்திற்கு பின்னோக்கி வருவதால் சில குழப்பங்கள் உருவாகும் கவனம் தேவை.
ராசிக்கு 4-ம் ஸ்தானமான அர்த்தஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பங்களும் மன சங்கடங்களும் உருவாகும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ விரைவு வரக்கூடும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும் உடல் உபாதைகள் உண்டாகும் வீட்டு உணவுகளை சாப்பிடுவது நன்று வெளியிட உணவுகளை தவிர்ப்பது நலம்.
கேது 9-ம் இடத்தில் இருப்பதாலும் வருகின்ற ராகு-+கேது பெயர்ச்சியில் கேது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் சிறப்பில்லை தந்தை மகன் +மகள் உறவுக்குள் விரிசல்கள் விழும் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.பூர்வீக சொத்துக்கள் விற்பனை ஆகும் பழைய கடன்கள் அடைபடும் புதிய சொத்துக்கள் வாங்க முடியும்.பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் உண்டாகும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் அடிக்கடி கோயில் ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்வீர்கள்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்க்கிழமைகளில் நவகிரக சந்திரன் வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள் பௌர்ணமி திதியன்று வீட்டில் மஹாலட்சுமி வழிபாடும் செய்து வாருங்கள் செல்வம் செழிக்கும் நல்லது நடக்கும்.