தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.
உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.
உங்கள் ராசிக்கு குருபகவான் ராசிக்கு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து கடந்த ஒரு வருட காலமாக பல தொல்லைகள் தொழில் நஷ்டம் என வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கும் ஜூன் மாதம் நடைபெறக்கூடிய குருபெயர்ச்சி பலன்களில் குரு 9-ம் இடத்தில் உச்ச பலம் பெறுவதால் யோக நிலைகள் காண முடியும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப காரியங்களும் நடைபெறும் பண சேமிப்புகள் உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் புது வண்டி வாகன யோகமும் சிலருக்கு புது வீடு கட்டும் அமைப்பும் உண்டு.
கேது 10-ம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு அமர்ந்திருப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வெளிநாடு பயணங்கள் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் தேக ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் எதிர்பாராத பணம் கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் நடக்கும்.
டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும். ராகு + கேது பெயர்ச்சியில் கேது 9-ம் இடத்துக்கு பின்னோக்கி செல்வது சிறப்பில்லை. இவருடம் சனிபகவான் 5-ம் இடத்தில் காணப்படுவதால் பிள்ளைகளால் விரையங்களும் சற்று மனசங்கடங்கள் உண்டாகும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் விட்டுக் கொடுத்து செல்லவும் முன் கோபம் பின் விளைவுகளை ஏற்படுத்தும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் சொத்துக்கள் வாங்கும் பொழுது கவனமாக இருங்கள் பத்திர பதிவுகள் சரிபாருங்கள்.
இவ்வருடம் ராகவும் 4-ம் இடத்தில் பலவீனமாக தென்படுவதால் சற்று எச்சரிக்கை அவசியம். டிசம்பர் மாதம் நடைபெறும் ராகு + கேது பெயர்ச்சியில் ராகுபகவான் 3-ம் இடத்துக்கு பின்னோக்கி வருவதால் பலம் பெறுகிறார். இதனால் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வெளிநாடுகளில் வேலை செய்யவும் வெளிநாடுகளில் கல்விப் பயலும் யோகம் அமையும் திடீர் தன வரவர்களால் பணத் தேவைகள் பூர்த்தியாகும் பங்குச்சந்தை முதலீடுகள் பன்மடங்கு லாபத்தை தரும். மருத்துவ விரையங்கள் கட்டுக்குள் வரும் நோய்கள் குணமடையும்.
பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்தில் சென்று நவகிரக வழிபாடும் சிவனுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் பிரதோஷ வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.