தமிழ்ப் புத்தாண்டு 2026 - துலாம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.

உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.

உங்கள் ராசிக்கு நிச்சயமாகவே இந்த தமிழ் புத்தாண்டு மிக மாற்றத்தை தரக்கூடிய ஆண்டாக விளங்கும் கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு இந்த ஆண்டு நற்பலன்கள் மூலமாக நன்மைகளை காண முடியும்.

சனிபகவான் ராசிக்கு 6-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் இருப்பதால் பல நன்மைகளை வாரி வழங்குவார் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள். வழக்குகள் வாபஸ் ஆகும் பங்காளிகளுக்குள் இருந்து வந்த சண்டைகள் முடிவுக்கு வரும் பெரிய மனிதர்கள் உதவிகளும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும் தைரியம் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

குருபகவான் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் யாவும் வெற்றிகளை தேடி தரும் பண வரவுகள் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் கடன்கள் சிறுக சிறுக அடைபடும் கணவன் மனைவி உறவு பலப்படும் பண சேமிப்புகள் உண்டாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும் .நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த விவகாரங்கள் முடிவுக்கு வரும்.

ஜூன் மாதம் 2-ம் தேதி நடைபெற்க் கூடிய குரு பெயர்ச்சியில் குரு ராசிக்கு 10-ம் இடத்துக்கு சென்றாலும். 31-10-2026ல் அதிச்சார கதியாக 11-ம் வீடான லாப ஸ்தானத்துக்கு வந்து 25-01-2027 வரை யோகங்களை வாரி வழங்குவார்.

கேது பதினொன்றாம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கேதுவால் நன்மைகள் உண்டாகும் தேக ஆரோக்கியம் நன்றாக காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் தீராத நோய் தீர்ந்துவிடும் நாள்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை மூலமாக நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபத்தை தரும். டிசம்பர் மாதம் 5ம் தேதி ராகு + கேது பெயர்ச்சியில் கேது10ம் வீட்டிலும் நன்மைகளை வழங்குவார்.

இவ்வருடம் ராகுபகவான் மட்டும் சற்று பலவீனமாக 4-மற்றும் 5-ம் இடங்களில் வலம் வருவதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்துங்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது புதிய நபர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
பங்குசந்தை முதலீடுகளில் கவனம் தேவை பெரிய தொகைள் நஷ்டம் அடைய சாத்தியம் உண்டு.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரன் வழிபாடும் அம்பாள் வழிபாடும் செய்து வாருங்கள் பௌர்ணமி விரதம் திருவண்ணாமலை கிரிவலம் நன்மைகளை வாரி வழங்கும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE