தமிழ்ப் புத்தாண்டு 2026 - சிம்மம் ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.

உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.

உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் கணவன் மனைவி உறவு பலப்படும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடையின்றி அமையும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் பிள்ளைகளால் ஆதாயமும் நன்மைகளும் உண்டாகும் உறவினர் மூலமாக நற்செய்தி கிடைக்கும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புது வீடு கட்டும் அமைப்பும் உண்டு.

ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சியில் குரு 12-ம் இடமான விரைய ஸ்தானத்துக்கு வருகிறார் இதனால் பண விரையங்கள் உண்டாகும் பண விவகாரங்கள் கவனம் தேவை.

சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் இருப்பதால் தேவையில்லாத குழப்பங்களும் மனஸ்தாபங்களும் உண்டாகும் குடும்பத்தில் சண்டைகள் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.

ராசிக்குள் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் அமர்ந்து குழப்பங்கள் தந்திருப்பார்கள் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறக்கூடிய ராகு +கேது பெயர்ச்சி பலன்களில் ராகு பகவான் ராசிக்கு ஆறாம் இடமான உப ஜெயஸ்தானத்திற்கு வருகிறார் இதனால் திடீர் பண வரவுகள் உண்டாகும் ஓய்வுதிய பணம் காப்பீடு பணம் போன்றவற்றை கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் கைகூடும்.

வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் கேது பகவான் ராசிக்குள் இருந்து 12-ம் இடத்துக்கு பின்னோக்கி செல்கிறார் இதனால் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் ஆன்மீக எண்ணங்கள் மேலோரும் புதிய சிந்தனைகள் உதிக்கும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக ராகு +கேது வழிபாடும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தால் தீபமேற்றி அர்ச்சனையும் செய்து வாருங்கள் பௌர்ணமி அல்லது அமாவாசை திதி அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE