தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய் கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.
உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ஜூன் 2-ம் தேதி வரை குரு பகவான் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் குடும்பத்தில் திருமணம் சீமந்தம் குழந்தை பாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும் தன வரவுகள் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரம் செழிப்படையும் இவ்வருடம் குரு இரண்டு முறை பெயர்ச்சி ஆகிறார் ஒன்று வழக்கமான குரு பெயர்ச்சி பிறகு அதிசாரகதியாக 4-ம் வீட்டிற்கு செல்கிறார் 3-ம் மற்றும் 4 -ம் இடங்கள் குரு பகவானுக்கு சிறப்பான இடங்கள் அல்ல வீண் விரைய செலவுகள் வரக்கூடும் கவனம் தேவை.
இவ் வருடம் முழுவதும் சனிபகவான் பலம் பெற்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை பெறுவீர்கள் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள் வழக்குகள் வாபஸ் ஆகும் தீர்ப்புகள் சாதகமாக அமையும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
டிசம்பர் மாசம் 5-ம் தேதி வரை ராகு பகவான் ராசிக்கு 10 -ம் இடத்தில் அமர்ந்து நன்மைகளை வாரி வழங்குவார் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் உத்தியோகத்தில் நற்பெயர் கிடைக்கும் டிசம்பர் 5-ம் தேதிக்கு பிறகு 9-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் இதனால் சில குழப்பங்களும் தந்தை மகனுக்குள் கருத்து மோதல்களும் உருவாகும் கவனம்.
கேது ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து சில சங்கடங்களை வழங்கினாலும் டிசம்பர் 5-ம் தேதி 3ம் இடத்துக்கு பின்னோக்கி வருவதால்.
குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். மனம் அமைதி பெறும். ஆன்மீக எண்ங்கள் மேலோங்கும்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய புதன் கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடும். அமாவாசை திதியன்று.
குலதெய்வ கோவிலுக்கும் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.