தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.
உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.
உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் வருகின்ற ஜூன் மாதம் 2-ம் தேதி 4ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். பொதுவாகவே குருபகவான் 3 மற்றும் நான்காம் இடங்களில் பெரிய நற்பலன்களை வழங்க மாட்டார் அக்டோபர் மாதம் 31-ம் தேதி 5-ம் இடத்திற்கு அதிசாரகதியாக செல்கிறார் ஐந்தாம் வீடு குரு பகவானுக்கு உகந்த இடம் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷம் பிறக்கும் திடீர் தன வரவுகள் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும் திருமண சுப காரியங்கள் கைகூடும் குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.
இது ஜனவரி மாதம் 25-ம் தேதி வரைக்கும் நடைபெறும் திரும்பவும் குருபகவான் வக்ரகதியில் திரும்பவும் 4-ம் வீட்டுக்கு செல்வார்.
மற்றும் சனி பகவான் 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன விரயங்கள் உண்டாகும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் உண்டாகும் மனக்குழப்பங்கள் அதிகமாக காணப்படும். பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகளும் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் திடீர் தன வரவுகளும் பண தேவைகளும் பூர்த்தியாகும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் விருப்பமான ஊருக்கு பணியிடை மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கான சேமிப்புகளும் உண்டாகும்.
டிசம்பர் ஐந்தாம் தேதி ராகு + கேது பெயர்ச்சியில் ராகு ராசிக்கு பத்தாம் இடத்திற்கு பின்னோக்கி சென்றும் நற்பலன்களை வழங்குவார்.
கேது இவ்வருடம் ஐந்தாம் இடத்திலும் வருகின்ற ராகு + கேது பெயர்ச்சியில் நான்காம் இடத்திற்கும் பின்னோக்கி செல்வதாலும் பெரிய நன்மைகளை வழங்க மாட்டாது நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள். குடும்ப உறவுகளிடம் கோபத்தை காட்டி விடாதீர்கள் பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
பரிகாரம்:
வாரந்தோறும் வருகின்ற சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் தேய்பிறை அஷ்டமி வழிபாடும் சிறப்பை தரும்.