ஏழரை சனி , அஷ்டம சனி - குழந்தைகளுக்கு என்ன பலன்?

By செய்திப்பிரிவு

குழந்தைகள் என்பது 12 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் அடிக்கடி காய்ச்சல் ,அஜீரண பிரச்சினை ,கீழ விழுதல் ,காயம் உண்டாகுதல் என இருக்கும்.தாய் ,தந்தைக்கு கருத்து வேறுபாடு உண்டாக்கும் .தந்தைக்கு தொழில் மந்தம் ,தந்தைக்கு ஊர் விட்டு ஊர் போகும் அலைச்சல் வேலை பளு உண்டாக்கும். வருமான குறைவு உண்டாக்கும்.

12 வயது முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏழரை சனி அஷ்டம சனி வரும்போது
குடும்பத்தில் மூத்தவர்களை பாதிக்கும் .

தந்தையின் தந்தை ,பாட்டி ,தாயின் தந்தை ,பாட்டி , இவர்களுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ,தந்தையின் மூத்த சகோதரன் ,சகோதரியை பாதிக்கும்.தாயின் மூத்த சகோதரி ,சகோதரனை பாதிக்கும்.மருத்துவ செலவு ,பண நஷ்டம் ,அவமானம் ,பழி சொல் உண்டாக்கும்.

இவர்களும் குழந்தைக்கு இல்லை எனில் குழந்தையின் மூத்த சகோதரன் ,சகோதரிகளை பாதிக்கும்.

எக்ஸ்ரே ,ஸ்கேன் எடுத்தல் ,மாவுக்கட்டு ,க்ளுக்கோஸ் ,தையல் போடும் சூழல் ரத்த காயம் உண்டாகுதல் ஏற்படலாம் .கவனம் தேவை .

இதுக்கெல்லாம் பரிகாரமா கிராமத்துல நம்ம குடும்பத்துல யாரும் ரத்தம் சிந்தம் கூடாதுன்னும் அகால மரணம் அடைய கூடாதுன்னும் ஆடு வெட்டி பங்காளி மாமன் மச்சினனுக்கு விருந்து போடுவாங்க....நாம ஆஸ்பத்திரியில இருந்தாலும் மாமன் மச்சினன் வருவான் நாம விருந்து போட்டாலும் மாமன் மச்சினன் வருவான்.

இப்பல்லாம் விருந்து போட்டா செலவு ஆகும்னு நினைச்சோம் உறவுகளை இழந்தோம்.பழக வாய்ப்பில்லாமல் போனது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE