உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய தொழில்கள் எது?

By செய்திப்பிரிவு

1. மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

மிருகசீரிஷம் நட்சத்திரம் ரிஷபம் மற்றும் மிதுனம் இராசிகளில் வரும். மொழி இனப்பற்று அதிகம் உடைய மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி காண்போம்.

சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.

மென்பொருள் பொறியாளர்
அனைத்து வகையான இசைக் கலைஞர்கள்
மொழி ஆராய்ச்சி செய்பவர்கள்
நாவலாசிரியர், கதை ஆசிரியர்
செல்லப்பிராணி விற்பனை (பூனை, நாய்)
ஃபேஷன் டிசைனர்
ரியல் எஸ்டேட்
ஜவுளி கடை
அலுவலக உதவியாளர்
சுற்றுலா அழைத்துச் செல்லும் தொழில்
மனோதத்துவ நிபுணர்கள்
சிவில் நீதிபதிகள்
பத்திர பதிவுத்துறை
பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை (வளையல், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை)
நிலம் சம்பந்தப்பட்ட தொழில்.

2. சித்திரை நட்சத்திரத்திற்குரிய தொழில்:

எதையும் உருவாக்க கூடிய சித்திரை நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.
சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி சித்திரை நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.

கட்டிடக் கலைஞர்கள்
சிற்பிகள்
ஜவுளிக்கடை
விவசாயம்
ஆடை வடிவமைப்பாளர்
இயந்திர பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை
சிறை அதிகாரி
வழக்கறிஞர்கள்
பாடகர், இசையமைப்பாளர்
ஓவியர்கள்
திரைக்கதை எழுத்தாளர்
நகைக்கடை தொழில் (நகைக்கடையில் வேலை பார்ப்பவர்களையும் குறிக்கும்)
விளம்பரத் தொழில்
மார்கெட்டிங் வேலைகள்
கிராஃபிக்ஸ் கலைஞர்கள்
வாஸ்து நிபுணர்கள்
சொற்பொழிவாளர்
பொது மருத்துவர்கள்.

3. அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

பிரதி பலன் பார்க்காமல் உதவும் எண்ணம் கொண்ட அவிட்டம் நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது அவிட்டம் நட்சத்திரம்.சந்திரன்,
லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அவிட்டம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.

இசை கலைஞர்கள்
நடனக் கலைஞர்கள்
இராணுவம்
இரும்பு வியாபாரம்
இரத்தின கற்கள் வியாபாரம்
விளையாட்டு வீரர்கள்
ரியல் எஸ்டேட்
யோகா ஆசிரியர்கள்
மருத்துவர்கள்
சமையல்காரர்
வாகன ஓட்டுநர்
காவல்துறை
டீ கடை,ஹோட்டல்
கறிக் கடை
கோழி, கால்நடை வளர்ப்பு
ஆடு வளர்ப்பு
மருந்தகங்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE