தனுசு ராசி அர்த்தாஷ்டம சனியின் பலன்கள்!

By செய்திப்பிரிவு

உங்களின் ராசிக்கு தன ஸ்தானாதிபதியும், கீர்த்தி ஸ்தானாதிபதியுமான சனி பகவான் ராசிக்கு சுகஸ்தானத்தில் அர்த்தாஷ்டசனியாக அமர்கின்றார்.

சனி பார்வை சத்ரு ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், ராசியையும் பார்வை இடுகிறார்.

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை ஒன்று, ஆறு, பத்து, ஆக இடங்களில் பதிவாவதால் , அதன் விளைவாக விஸ்வரூபம் எடுத்த பிரச்சனைகள் எல்லாம் வேகமாக முடிவடையும், உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு , கூட்டு முயற்சிகளில் ஆர்வம் மிக்கவர்கள் , பிரித்தாலும் வேற்று உறுப்பினர்களோ வீட்டு மனிதர்களையோ சேர்த்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

உடல்நிலை, எதிர்ப்பு, வியாதி, கடன், தொழில் ,செயல் ,புகழ், கீர்த்தி ஆகிய ஆதி பத்தியங்களை தரும் இடங்களில் எல்லாம் மாபெரும் மாற்றங்களை தரப் போகிறார் சனி பகவான்.

ஜென்ம ராசியை சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தின் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம்,

வாகனங்கள் செல்லும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துங்கள் | அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம்.

ஆறாம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த உத்தியோக உயர்வு வந்து சேரும்.

கடன் பாக்கிகள் வசூல் ஆகும் , பகையான நட்பு உறவாகும்.

பத்தாம் இடத்தை பார்க்கும் சனியால் உங்கள் பெயரில் உள்ள தொழில்களை, சொத்துக்களை, மனைவி, மக்கள் மற்றும் நம்பிக்கைய பாத்திரமானவர்களுக்கு பெயர் மாற்றலாமா என்ற சிந்தனை
இப்போது வரும்.

திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் கைகொடுக்கும்.

பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

நாளில் சனி வந்தால் நலமும் வருமா என கேட்டேன் ?

கோள்களிலே சனியதனை கும்பிட்ட மாந்தருக்கு நாளும் வளமும் கிடைக்கும் நட்பெல்லாம் கை கொடுக்கும் ஊர்மாற்றம் இடமாற்றம் உடனே வந்து மகிழ்ச்சி தரும்.

ஓம்சனீஸ்வராயநமஹ
சனிகாயத்ரிமந்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
சனிமூலமந்திரம்
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ",
சனிஸ்தோத்திரம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
தமிழில்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE