களத்திர தோஷமும் திருமணத்தின் போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
களத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? என்பதைப் பார்ப்போம்.
லக்னம், சந்திரன், சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1, 2, 4, 7 , 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.
4 - ம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2, 7 - ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8, 12 -ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7 -ம் இடம் பாவ கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும்.
இந்த தோஷம் 10-ல் 6 ஜாதகங்களில் இருக்கும். கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து தங்களது மணவாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள்ளலாம்.
பரிகாரங்கள் :
முதலில் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்து, வீட்டில் சுமங்கலி பூஜை செய்யவேண்டும். பின்னர் திருமணஞ்சேரி, திருவிடந்தை ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு பங்குனி_மாதம்_வரும்
வளர்பிறை_வெள்ளிக்கிழமையில் திருமாங்கல்யமும், மஞ்சள் பட்டு பாவாடையும் சாத்தி ஒரு மஞ்சள் சரடும் பாதத்தில் வைத்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கவேண்டும். இதைத் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை 'மஹாலக்ஷமி ஸ்தோத்ரம்' சொல்லி வந்தால், இந்த தோஷம் நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெறும்.
ஆண்களின்_ஜாதகத்தில்_ஏற்படும்_களத்திர தோஷம்:
ஆண்களின் ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம் என்பது மேலே சொன்ன தோஷங்களோடு சூரியன், சுக்கிரன் இருவரும் 5, 7, 9 - ம் வீட்டில் இருந்தாலும், சூரியன், ராகு அல்லது கேது சேர்ந்து 7 -ம் வீட்டில் இருந்தாலும் 2 - ம் வீடு பாதகப்பட்டாலும் ஏற்படும்.
பரிகாரங்கள்:
சூரியனால் தோஷம் ஏற்பட்டால், உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலுக்குச் செப்புப் பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கிரனால் ஏறபட்டால், ஸ்ரீரங்கம் காவிரியில் வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டு, தாயாருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.
களத்திர தோஷங்களுக்கு, நவகிரக ஹோமங்கள் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் வரும் பெளர்ணமிகளில் சத்யநாராயண பூஜை செய்வதும் நல்ல பலனை அளிக்கும்...!!!