சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள் பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் மற்றும் இந்த இடங்களில் இருக்கும் பொருட்கள் தொடர்பான மதம் மற்றும் மரபுவழி விலக்கங்கள். இவ்வாறு விலக்கத்தக்க நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் ஆகியோரிடமிருந்து விலகி நிற்பது என்பதை தீட்டு என்கிறார்கள்.
தீட்டு, துடக்கு, குற்றம், ஆசௌசம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும்.
ஒரு இந்து ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், இந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். ஆதி மூலமான ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் - எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் ஆதி மூலமான ஒரு ஆணையும் சேர்த்து ஏழு தலைமுறைகள் வருகின்றது. இந்த ஏழு தலைமுறைகளுக்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் அல்லது இறப்பினாலும் அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
பஞ்சாங்கங்கள் ஒருவர் இறந்தபின் தவிர்க்க வேண்டிய சுப காரியங்கள் பற்றி சில பரிந்துரைகளை அளிக்கின்றன. இறந்தவர் மற்றும் குறிப்பிட்டவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள உறவுமுறைகள் தான் தவிர்க்க வேண்டிய சுப காரியங்களை மாதங்கள் மற்றும் ஆண்டு கணக்கில் பரிந்துரைக்கின்றன.
1 ஒருவரின்
தாய் இறந்தால் ஒரு வருடம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
2 ஒருவரின்
தந்தை இறந்தால் ஒரு வருடம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
3 ஒருவரின்
மனைவி இறந்தால் மூன்று மாதங்கள்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
4 ஒருவரின்
சகோதரன் இறந்தால் ஆறு மாதங்கள்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
5 ஒருவரின்
பங்காளிகள் (தாயாதிகள்) இறந்தால் ஒரு மாதம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
அடைப்பு என சொல்லகூடிய தனிஷ்டா பஞ்சமி நாளில் ஒருவர் இறந்து விட்டால் 2, மாதம் 3,
6 மாதம் என எந்த நட்சத்திரத்தில் இறந்தாரோ அத்தனை மாதங்கள் தீட்டு ஏற்படும் அடைப்பு முடியும் நாளில் ஹோமம் வளர்த்து ஆன்மா சாந்தி அடைய செய்ய வேண்டும் இந்த நாட்களில் இரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே தீட்டு இவர்களின் வீடுகளில் சுபநிகழ்வுகள் நடத்தகூடாது.
மற்றபடி பங்களிகள் அனைவருக்கும் தோஷம் கிடையாது ஒருமாதம் சென்ற பிறகு இவர்கள் குல கோயில்களுக்கு செல்வது சுபநிகழ்வுகளும் நடத்தலாம்.