சனிகிழமை வன்னி மரத்தை ஒன்பது முறை சுற்றி வணங்கவும் ...உங்கள் தெருவில் யாரேனும் இறந்துவிட்டால் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டு சுடுகாடு வரை சென்று வரவும்.
சனிகிழமையில் காகத்துக்கு சாதம் வைத்தபின் மதியம் உண்ணலாம்...எள் கலந்த சாதம் எல்லாம் காக்காவுக்கு வைக்கிறாங்க அதெல்லாம் ஓவர்.நீங்க சாப்பிடுற சாப்பாடு கொஞ்சம் வெச்சா போதும்.
சனி கிழமையில் காலை வினாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம் .அனுமன் கோயிலில் வெற்றிலை கிராம்பு ஒன்று வைத்து கட்டிய மாலை அனுமனுக்கு சார்த்தி வெண்ணெய் கொஞ்சம் கொடுத்து வழிபடலாம் .
சனி கிழமை மாலையில் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடலாம்.
ஊனமுற்றவர்களுக்கு சாப்பாடு ,முதியவர்களுக்கு குடை ,செருப்பு தானம் செய்யலாம்.
இறந்தவர் வீட்டில் வட்டமா நின்று பெண்கள் ஒப்பாரி வைப்பாங்க...அதில் பெண்கள் கலந்துகொள்வது முக்கியம்.
வசதி இருப்பவர்கள் காசி சென்று வரவும் 24 மணி நேரமும் பிணம் எரியும் இடம்..சனி தோசம் நிவர்த்தி முக்தி அடையும் இடம். நளமகாராஜா சுடுகாடு வெட்டியானாக ஏழரை சனியில் இருந்தார்..ஆனால் ஒருமுறை மட்டும்தான் செல்ல வேண்டும்.
சுடுகாடு அருகில் இருக்கும் சிவன் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வரர் சன்னதியில் எள் தீபம் ஏற்றி வழிபட்டாலும் போதும்.
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் சன்னதி வழிபாடு நல்லது...அருகில் இருப்போர் சென்று வரலாம்.