கேது திசை நடந்தால் கெடு பலன்களா?

By செய்திப்பிரிவு

கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். கேதுவுக்கு ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது. ஞான காரகன் மோட்சகாரகன் என வர்ணிக்கப் படும் கேது பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடன் இருந்தால் ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

கேது ஒரு பாவ கிரகம் என்பதால் அவர் உப ஜயஸ்தானங்களான 3,6,10,11 ல் அமையப் பெற்றிருந்தாலும் 1,5,9 ல் அமைந்து குருபார்வையுடனிருந்தால் சமுதாயத்தில் நல்லதொரு கௌரவம், பல பெரிய மனிதர்களின் தொடர்பு, கோயில் கட்டும் பணிகளில் ஈடுபாடு தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு கொடுக்கும். கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் கேது திசை காலங்ளில் ஒரளவுக்கு நன்மையான பலன்களை அடைய முடியும்.

பொதுவாகவே கேதுதிசை காலங்களில் நற்பலனை அமைவதை விட கெடு பலன்களே அதிகம் உண்டாகும். கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெற்றோ, பாவகிரக சேர்க்கைப் பெற்றோ அமைந்து கேதுதிசை நடைபெறும் காலங்களில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய அவலங்களை எதிலும் மந்தம், இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். குறிப்பாக கேது திசை காலங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும் கேது பகவான் பலம் பெற்று குழந்தை பருவத்தில் கேது திசை நடைபெற்றால் விளையாட்டு தனம், பிடிவாத குணம் போன்றவை இருக்கும்.

வாலிப பருவத்தில் நடைபெற்றால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும், கல்வியில் சுமாரான நிலையிருக்கும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபாடு, போராடி வாழ்வில் வெற்றி பெறக் கூடிய நிலை ஏற்படும்.

முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளுக்காக செலவு செய்யும் அமைப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை, சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து உயரக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE