புதிய வீடு கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடம் காலி மனையாக இருந்திருக்கும் அல்லது பழைய பாழடைந்த வீடாக இருந்திருக்கும். இதுபோன்ற பாழடைந்த வீடு அல்லது காலி மனை போன்றவற்றில் துர்தேவதைகள் வாழும். மேலும் வீட்டின் கட்டுமானப் பணியின் போது அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கையில் ஆணி கிழிப்பது, கை, கால்களில் இடித்துக் கொண்டு ரத்தம் சிந்துவது போன்ற ஒரு சில நிகழ்வுகள் நடந்திருக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த மனையின் வாஸ்து லட்சணம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற குறைகளை எல்லாம் களைவதற்காக புதுமனை புகுவிழாவின் போது கணபதி ஹோமம் செய்கிறார்கள்.
கணபதி ஹோமம் மட்டுமல்லாது, நவகிரஹ ஹோமம், வாஸ்து ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவற்றையும் சேர்த்துச் செய்வார்கள். எந்தவித குறையுமின்றி அந்த வீட்டில் செல்வம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஹோமங்களை புதிய வீட்டில் குடியேறுவதற்கு முன்பு செய்கிறார்கள்.