3 ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சாதிப்பீர்கள் தொழில் முன்னேற்றம் உண்டாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.
இம்மாதம் சுக்கிரன் 2-ம் ஸ்தானமான தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் புதிய முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள். புதிய வாகன யோகமும் உண்டு.
மாத பிற்பாதி சூரியன் 3 ம் வீட்டில் சனிபகவானுடன் இணைவதால் அரசியல் செல்வாக்கு கூடும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்
பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களின் உதவிகளுகம் கிடைக்கும்.
2-ம் இடத்தில் ராகுவும் அஷ்டமஸ்தானமான 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் மன குழப்பங்கள் காணப்படும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்படவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் மிகுந்த கவனம் தேவை.
இம்மாதம் செவ்வாய் இரண்டாம் வீட்டில் பலவீனப்படுவதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் அவசர முடிவுகளால் சில இழப்புகள் நேரிடும் கவனம் இமாதம் புதனும் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் புதிய மனிதர்களுடன் எச்சரிக்கையாக பழகுங்கள் பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்க்கவும்.
குருபகவான் ஆறாம் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் முதலீடுகள் செய்யாதீர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
மார்ச் 2,3,4 மற்றும் 30,31 தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது கவனம்.
பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ தரிசனமும் சிவாலயங்களில் இருக்கும் நவகிரக சூரியன் வழிபாடும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.