மார்ச் 2026 மாத ராசி பலன் - விருச்சிகம்

By செய்திப்பிரிவு

சுக்கிரன் பலம் பெற்று 4 மற்றும் 5-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும் கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர்களால் நற்செய்தி கிடைக்கும் புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும்.

4-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் புதிய யுக்திகளால் வியாபார விரிவாக்கம் உண்டாகும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் வீடு நிலம் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.

10-ம் இடத்தில் கேது இருப்பதால் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள் தொழில் விரிவாக்கம் உண்டாகும் புதிய வேலை வாய்புகளும் உருவாகும்.
அஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தண்ட செலவுகள் உண்டாகும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்கவும்.

இம்மாதம் சூரியன் 4 மற்றும் 5-ம் இடங்களில் பலவீனப்படுவதால் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்வீர்கள் பெரிய மனிதர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள்.

சனிபகவான் 5 ம் இடத்தில் பலவீப்படுவதால் பிள்ளைகளால் மன உளச்சலும் சங்கடங்களும் உருவாகும் தேவையற்ற பேச்சுக்கள் குடும்ப உறவுகளுக்குள் சங்கடங்களை ஏற்படுத்தும்.

4 ம் இடத்தில் ராகு பலவீனப்படுவாதால் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளில் கவனம் செலுத்தவும்.
வில்லங்கம் சரிபார்க்கவும்.

எலக்ட்ரிக்கல் உபகரங்கள் செலவு வைக்கும். செவ்வாயும் 4 ல் பலவீனப்படுவதால் முன் கோபங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் சகோதர சகோதரிகளுக்கள் மனஸ்தாபங்கள் வருவதை தவிர்கவும்.

மார்ச் 25.26.27 சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய
செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE