மார்ச் 2026 மாத ராசி பலன் - துலாம்

By செய்திப்பிரிவு

வருட கோள்களில் குரு 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் திருமண சுப காரியங்கள் நடக்கும் மழலை பாக்கியம் உண்டாகும் பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.

11-ம் இடத்தில் கேது இருப்பதால் மறைமுக எதிர்புகள் விலகும். தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும் ஆன்மிக எண்ணங்கள் உண்டாகும்
வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

6ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் வழக்குகள் சாதமான தீர்புகள் கிடைக்கும் .
மாத பிற்பாதி சூரியன் 6-ம் இடத்தில் பலத்துடன் காணப்படுவார் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

மார்ச் 26-ம் தேதிவரை சுக்கிரன் 5-ம் வீட்டில் பலப்படுவதால் பெண்களால் மதிப்பும் மரியாதையும் உயரும் புதிய
வண்டி வாகன யோகம் உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும்.

புதன் 5-ம் இடத்தில் பலவீனப்படுவதால் ஞாபக மறதி அதிக அளவில் காணப்படும். பண விவகாரங்களில் கவனம் தேவை.
இம்மாதம் செவ்வாயும் 5ம் வீட்டில் பலவீனப்படுவதால் முன் கோபத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அவசர முடிவுகள் தவிர்கவும்.

ராகு 5 ம் வீட்டில் இருப்பதால் தந்தை மகன் உறவுக்குள் விரிசல் விழும் வீண் விவாதங்கள் தவிற்க்கவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

மார்ச் 23,24,25 சந்திராஷ்டமம்.

பரிகாரம்.
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வினாயக பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவும் அமாவாசை அல்லது பௌர்ணமி திதியில் குலதெய்வ வழிபாடு சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE