புதன் 6-ம் இடத்தில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும் பாெருளாதார உயர்வு மேம்படும் அபாரா ஞாபக சக்தி உண்டாகும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள்.
பங்குசந்தை முதலீடுகள் லாபத்தை தரும். இம்மாதம் செவ்வாயும் 6 ம் இடத்தில் பலப்படுவதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
தொழில் போட்டிகள் குறையும்.
எதிரிகள் விலகிச்செல்வார்கள். சகோதரர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படும். 6-ல் ராகுவும் பலம் பெற்றிருப்பதால் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.வெளிநாடு வேலைகளும் கிடைக்கும்.
புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். மாத முற்பாதி வரை சூரியன் 6-ம் இடத்தில் பலம் பெற்று காணப்படுவதால் அரசியல் செல்வாக்கு கூடும் அரசு தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.
12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் கேது இருப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் அடிக்கடி கோவில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் சுப விரையங்கள் ஏற்படும்.
இம்மாதம் சுக்கிரன் 6 மற்றும் 7-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் பெண்களால் அவமானங்கள் வரக்கூடும் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலைத்தூக்கும்.
பத்தில் குரு வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும். புதிய முதலீடுகள் தவிர்கவும். 7-ம் இடத்து கண்டகச்சனியாக சனிபகவான் வலம் வருவதால் குடும்ப உறவுகளிடம் அனுசரித்து போகவும் தாய் தந்தையாருடன் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை தவிற்க்கவும்.
மார்ச் 21,22,23 சந்திராஷ்டமம்.
பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் சிவன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாள் வழிபாடு செய்து வரவும் நல்லதே நடக்கும்.