மார்ச் 2026 மாத ராசி பலன் - கடகம்

By செய்திப்பிரிவு

புதன் அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் நன்மைகளை வழங்குவார் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருக்கும் பெரிய தொகை உங்கள் கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும்.

நஷ்டத்தில் இயங்கிவரும் தொழில்கள் லாபத்தை தரும். 8 மற்றும் 9-ம் இடங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பதால் தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும் மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதிய வண்டி வாகன யோகம் உண்டு.

12ம் இடமான விரைய ஸ்தானத்தில் குருபகவான் இருப்பதால் தன விரையங்கள் உண்டாகும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம்.

இரண்டாம் வீட்டில் கேதுவும் 8-ம் வீட்டில் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
கணவன் மனைவிக்குள் பனிப்போர் உண்டாகும்.

குடும்ப உறவுகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். 9-ம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து பிரச்சனைகள் உண்டாகும் பங்காளி சண்டைகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

இம்மாதம் சூரியன் 8 மற்றும் 9-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் தேவையற்ற வம்பு வழக்குகள் வரக்கூடும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் பண விவகாரங்களில் யாருக்கும் ஜாமின் தராதீர்கள்.

செவ்வாயும் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள் சகோதரர்களுக்குள் விட்டுக்கொடுத்து போவது நன்று.

மார்ச் 17,18 சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் மலைக்கோவில் முருகன் வழிபாடு செய்து வரவும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE