வருட கோள்களில் கேது 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் மன அமைதியும் சந்தோஷமும் நிலவும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
ராசிக்கு 10-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வீர்கள் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் கூட்டுத்தொழில் நன்றாக இருக்கும்.
மார்ச் 15ம் தேதிக்கு பிறகு சூரியன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் புதிய பொலிவுடன் காணப்படுவார்கள் பெரிய மனிதர்கள் அறிமுகம் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
மார்ச் 26 ம் தேதி வரை சுக்கிரன் 9ம் இடத்தில் பலமுடன் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவு பலப்படும்.
பண தேவைகள் பூர்த்தியாகும் புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும். 9-ம் இடத்தில் ராகு பலவீனமாக காணப்படுவதால் கடின உழைப்பு இருக்கும் வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும்.
அன்னிய மொழிகாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். புதனும் செவ்வாயும் 9-ம் இடத்தில் பவீனமாக சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும்.
அவசர முடிவுகளை தவிற்க்கவும்.
சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும் பங்குசந்தை முதலீடுகளை தவிர்கவும். தொழில் வியாபரத்தில் போட்டிகள் காணப்படும் உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ராசிக்குள் குருபகவான் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்கவும். கணவன் மனைவிக்குள் விட்டுகொடுத்து போவது நன்று.
மார்ச் 14,15,16 சந்திராஷ்டமம்.
பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடும் இயலாதவர்களுக்கு உணவும் வழங்குங்கள் நல்லதே நடக்கும்.