சூரியன் பலம் பெற்று 10 மற்றும் 11 ம் இடங்களில் வலம் வருவதால் வாழ்வில் வெற்றிகளை பெறுவீர்கள். புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் பண தேவைகள் பூர்த்தியாகும் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அரசியல் செல்வாக்கு கூடும். 10ம் இடத்தில் புதன் சஞ்சரிப்பதால் புதிய சிந்தனைகள் உதிக்கும்.
வியாபார யுக்திகளை கையாளூவீர்கள் கூட்டு தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் பங்குசந்தை முதலீடுகள் லாபகரமாக அமையும்.
செவ்வாயும் அதே 10 ம் இடத்தில் பலம் பெற்றிருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் சகோதரர்களுக்குள் நல் இணக்கம் ஏற்படும்.தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் விலகி விடுவார்கள்.
வருட கோள்களில் குரு. 2 ம் இடத்தில் வலம் வருவதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் திருமண தடைகள் விலகும் தொழில் வியாபாரங்கள் விருத்தி அடையும் சேமிப்புகள் உண்டாகும்.
ராகு 10 ம் இடத்தில் இருப்பதால் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
அன்னிய மொழி நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
வெளிநாடு செல்ல யோகம் அமையும்.
சனிபகவான் 11 ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
பல பிரச்சனைகளுக்கு முற்றிப்புள்ளியாக அமையும்.
மார்ச் 26 ம் தேதி வரை சுக்கிரன் 10 ம் இடத்தில் பலவீனமாக காணப்படுவதால் பெண்களால் பிரச்சனைகள் வரக்கூடும்
குடும்ப உறவினர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமாக செயல்படவும்.
4 ம் இடத்தில் கேது இருப்பதால் தாயாருக்கு அடிக்கடி மருத்துவ செலவுகள் வரக்கூடும். ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும். கோவில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.ரிஷபராசி நண்பர்களுக்கு இம்மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகும்.
மார்ச் 12,13,14 சந்திராஷ்டமம்.
பரிகாரம்.
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வினாயகருக்கு அர்ச்சனை செய்து வரவும் சதுர்த்தி வழிபாடு சிறப்பைத்தரும்
நல்லதே நடக்கும்.