மார்ச் 2026 மாத ராசி பலன் - மேஷம்

By செய்திப்பிரிவு

சுக்கிரன் 12 மற்றும் ஒன்றாம் இடங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.பண தேவைகள் பூர்த்தியாகும்.

இம்மாதம் செவ்வாய் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதையும் துணிச்சலாக எதிர் கொள்வீர்கள்
தொழில் போட்டிகள் குறையும்.

போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

புதனும் 11ம் இடத்தில் பலம் பெற்றிருப்பதால் அபார ஞாபக சக்தி உருவாகும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் புதிய வியாபார யுக்திகளை கையாளூவீர்கள் பங்குசந்தை முதலீடுகள் பன்மடங்கு லாபத்தை தரும்.

வருட கோள்களில் ராகு 11ம் இடத்தில் பலமுடன் சஞ்சரிப்பதால் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.வெளிநாடுகளில் பணி புரிய யோகம் அமையும்.
இம்மாத முற்பாதிவரை சூரியன் 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும்.

வழக்கம் போல் சனிபகவான் 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் ஆடம்ப செலவுகளை தவிற்க்கவும் பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும்.

ராசிக்கு 3ம் இடத்தில் குருபவான் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில்களுக்கான பெரிய முதலீடுகளை தவிற்க்கவும்
வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.

5ம் ஸ்தானத்தில் கேது இருப்பதால் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.பிள்ளைகளுடன் கனிவாக நடந்து கொள்ளவும்.
வீண் விவாதங்களை தவிர்கவும்.

மார்ச் 9.10.11 சந்திராஷ்டமம்.

பரிகாரம்.
வாரம் தோறும் திங்கட்க்கிழமைகளில் சிவன் வழிபாடு சிறப்பைத்தரும்.
அமாவாசை அல்லது பௌர்ணமி திதியில் குலதெய்வ கேவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE