இன்றைய ராசி பலன்கள் (25-01-2026 ஞாயிற்று கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்

பழைய முதலீடுகளால் சில சஞ்சலங்கள் ஏற்படும். போட்டி விஷயங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வம் இன்மை ஏற்படும். மனதளவில் பற்றற்ற தன்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

ரிஷபம்

குழந்தைகளின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் நெருக்கடிகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.

மிதுனம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கைகூடும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறப்பும். வியாபார தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வரவுகளில் சற்று கவனம் வேண்டும். அனுபவமான பேச்சுக்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல்கள் அமையும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோக ரீதியாக அலைச்சல்கள் மேம்படும். அரசு வகையில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.

துலாம்

உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். உதவி கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தியானம் மற்றும் மன ஒருமைப்பாட்டு செயல்களில் ஆர்வம் ஏற்படும். எடுத்த காரியம் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

பொழுது போக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். கடன் செயல்களில் பொறுமை காக்கவும். தந்தை வழியில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். மாமன் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். நுட்பமான செயல்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். பூர்விக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

மகரம்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரத்தில் சில நுட்பங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

மீனம்

கணித துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். ஆடை ஆபரணம் சேர்க்கை சிலருக்கு சாதகமாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். அன்பு வெளிப்படும் நாள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE