கேது 3-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் சோம்பல் விலகும். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் காரிய தடைகள் அகலும் தனலாபம் உண்டாகும் புத்திர லாபம் புத்தாடை பாக்கியம் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஐ.டி த்துறையில் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ட்ரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் சிறப்படையும். கூட்டு தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும்.
சுக்கிரன் இம்மாதம் அஷ்டம ஸ்தானம் மற்றும் 9-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பெண்களால் நன்மைகள் உண்டாகும்
விருந்துகளில் கலந்து கொள்வீர்கள் சொகுசாக சுகமாக வாழ வழிவகுக்கும் கணவன் மனைவி உறவு பலப்படும்.
உறவினர்களால் நன்மைகள் காணலாம்.
குருபகவான் அதே 1ம் இடமான ராசிக்குள் அமர்ந்து குழப்பங்களும் சில நன்மைகளையும் வாரி வழங்குவார்.வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும் அலைச்சல் அதிகமாக காணப்படும்.
சனிபகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் திடீர் பணவரவுகள் உண்டாகும் தேக ஆரோக்கியம் மேன்மைப்படும் மருத்துவ செலவுகள் குறையும். ராசிக்கு 9-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பூர்வீக நிலப்பிரச்சனைகள் உருவாகும் பங்காளிகளுக்குள் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
புதனும் 8-மற்றும் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.
யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள்.
இம்மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் பலவீனமாக காணப்படுவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது சகோதரர்கள் மற்றும் தந்தை இடத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது அவசர முடிவுகள் வேண்டாம்.
யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.
பிப்: 14,15,16 தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.