பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - விருச்சிகம்

By செய்திப்பிரிவு

சுக்கிரன் பலம் பெற்று 3' மற்றும் 4'ம் இடங்களில் பலம் பெற்று வலம் வருவதால் தாராளமான பண வரவு குடும்பத்தில் மகிழ்ச்சி குழந்தைபேறு மனதுக்கு இணைந்த இன்பங்கள் உண்டாகும். புதிய பதவிகளும் அதிகாரங்களும் கிடைக்கும் செல்வம் செல்வாக்கு பெருகும்.

பிப்ரவரி 23.ம் தேதி வரை செவ்வாயும் பலம் பெற்று 3ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் சகோதர வழியில் நன்மைகள் கிடைக்கும் இளைய சகோதரர்கள் உதவிகள் செய்வார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பிப்:13 ம் தேதிவரை சூரியன் பலத்துடன் 3-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் அரசாங்க அனுகூலங்கள் ஏற்படும்.
அரசியல் செல்வாக்கு கூடும்.

வருட கோள்களில் கேது பலம் பெற்று 10-ம் இடத்தில் இருப்பதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் செழிப்படையும்.

புதன் 4-ம் வீட்டில் பலப்படுவதால் சுறுசுப்பாக காணப்படுவீர்கள். புதிய வேலை வாய்புகள் உருவாகும்.புதிய முயற்ச்சிகளில் வெற்றி பெறுவீர்கள்
4'ம் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தாயாரிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள் மனைகள் நிலங்கள் புதுவீடு சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகள் கவனம் தேவை.

ஐந்தாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நஷ்டங்களும் தொல்லைகளும் வரக்கூடும் வெளிநாடு வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும் உடல் நலனில் கவனம் தேவை.

8'ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரங்கள் மந்தமாக இருக்கும் புதிய முதலீடுகளை தவிர்க்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. பிப்: 26,27,28. சந்திராஷ்டமம்

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்க்கிழமைகளில் சோமவார விரதம் இருந்து சிவ பெருமானை தரிசனம் செய்து வாருங்கள் பிரதோஷ வழிபாடும் சிறப்பை தரும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE