பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - தனுசு

By செய்திப்பிரிவு

ராசிக்கு. 2 மற்றும் 3-ம் இடங்களில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வண்டி வாகன யோகம் உண்டு சிலருக்கு வீடு மனை நிலங்கள் வாங்கும் அமைப்பும் உள்ளது கணவன் மனைவி உறவு பலப்படும்.

4-ம் தேதி வரை புதனும் 13ம் தேதி வரை சூரினும் 2-ம் வீட்டில் பலவீனமாக தென்பட்டாலும் பிற்பாடு 3-ம் வீட்டில் ராகுவடன் சூரியனும் புதனும் இணைவதால் நற்பலன்களை காணமுடியும்.

புத்திசாலித்தனமான செயல்பாடுகள் எடுத்த காரியத்தில் எதிலும் வெற்றிவாகை சூட்டுவீர்கள். புதிய மனிதர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.பங்குச்சந்தை. ட்ரேடிங்.ஸ்டாக் மார்கெட் அதிக லாபத்தை காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொன்னான மாதமிது அரசாங்க ஊழியர்களுக்கு நினைத்தது நடக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும்.

7-ம் இடத்தில் குரு இருப்பதால் திருமண சுபகாரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும் ஆடம்பர செலவுகள் மட்டும் தவிற்க்கவும்.
9-ம் வீட்டில் கேது இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் கவனம்.

4-ம் வீட்டில் சனிபகவான் இருப்பதால் தாயாரின் உடல்நலனில் கவனத்தை செலுத்தவும். வீண் வாக்கு வாதங்களும்
தவிர்கவும்.

23-ம் தேதி வரை 2-வீட்டில் செவ்வாய் இருப்பதால் அண்டை அயலார் வீட்டு பிரச்சனைகளும் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகளும் வரக்கூடும் யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடாதீர்கள். பிப்ரவரி 1,மற்றும் 2 .ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவான் வழிபாடும் சித்தர்கள் ஜீவசமாதிக்கு செல்வதும் நன்மைகளை ஏற்படுத்தும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE