பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - மகரம்

By செய்திப்பிரிவு

சுக்கிரன் பலம் பெற்று 1 மற்றும் 2-ம் இடங்களில் சஞ்சாரம் செய்வதால் பெண்களால் நன்மைகள் உண்டாகும் கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர் மூலமாக உதவிகள் கிடைக்கும் தாராளமான பண வரவு உண்டாகும்.

வருட கோள்களில் சனிபகவான் மட்டும் நற்பலன்களை வழங்குவார். திடீர் தன வரவுகள் உண்டாகும்.
ஓய்வூதிய பணம் ஆயுள் காப்பீடு முதிர்வு பணங்கள் .ஏலசீட்டு என எதாவது ஒரு வழியில் தன வரவு உண்டாகும் வெளிநாடு வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு வேலை வாய்புகள் உருவாகும்.மருத்துவ விரையங்கள் கட்டுக்குள் வரும்.

செவ்வாய் பலவீனமாக காணப்படுவதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசுவீர்கள்.
அவசர முடிவுகளால் தற்மசங்கடங்கள் உருவாகும்.

சகோதரர்களிடம் வீண் வாக்கு வாதங்களும் மன ஸ்தாபங்களும் உண்டாகும் வார்த்தையில் கவனமும் நிதானமும் தேவை.
புதனும் பலவீன படுவதால் சோம்பல் காணப்படும். வேலைக்கு செல்ல விருப்பம் இருக்காது. ஞாபக மறதி அதிகமாக காணப்படும்.

ஷேர்மார்கெட் ட்ரேடிங் ஸ்டாக் மார்கெட் ஆன்லைன் வியாபாரங்கள் டல்லடிக்கும்.
சூரியனும் 1,மற்றும் 2ம் இடங்களில் பலவீனப்டுவதால் அரசாங்க பகை வரக்கூடும்.பெரிய மனிதர்களை பகைத்து கொள்ளாதீர்கள்.அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

தந்தை மகனுக்குள் விட்டுகொடுத்து போவது நல்லது.
ராசிக்கு இரண்டில் ராகு சஞ்சாரம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை தேவையின்றி கடன் வாங்காதீர்கள் பண விஷயத்தில் கவனம் தேவை.

குருபகவான் 6 ம் இடமான ருண ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தயாரின் உடல் நலத்தில் கவனம் கொள்ளவும். ஆடம்பர சிலவுகளை குறைப்பது நல்லது.
தொழில்களுக்காக புதிய முதலீடுகள் போட வேண்டாம்.

கேது 8-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கோயில் குளம் என சுற்றுவதால் தொழில் வருமானம் தடைபடும்.

பூர்வீக நில பிரச்சனைகளும் உண்டாகும். பிப்: 3,4,5, ஆகிய நாட்களில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் அரச மரத்தடி வினாயகருக்கு வெள்றெருக்கம் பூமாலை அருகம்புல் வைத்து
நைவேத்தியமாக சுண்டல் வைத்து வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE