சுக்கிரன் 12, மற்றும் 1-ம் இடங்களில் வலம் வருவதால் பெண்களால் நன்மைகள் உண்டாகும்.மனைவி வழியில் தன வரவுகள் சொத்துக்கள் வந்து சேரும். அடிக்கடி விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.
வருட கோள்களில் குருபகவான் 5-ம் ஸ்தானத்தால் சஞ்சரிப்பதால் திருமண தடைகள் விலகும் தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும் .
சூரியன் பலவீனமாக 12 மற்றும் ஒன்றாம் இடங்கள் சஞ்சரிப்பதால் அரசாங்க பாகைகள் வரக்கூடும் தந்தை மகனுக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகும் பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
செவ்வாய் பலமிழந்து காணப்படுவதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் சகோதர வழியில் தேவையற்ற சங்கடங்கள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
விரைய ஸ்தானமான 12, மற்றும் 1-ம் இடங்களில் புதன் சஞ்சாரம் செய்வதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் சோம்பல் சுறுசுறுப்பின்மை மந்த நிலை காணப்படும் எந்த வேலையாக இருந்து தள்ளிப் போடுவீர்கள் அவசர முடிவுகளால் பணம் இழக்கும் அபாயம் உள்ளது
கவனம்.
வருட கோள்களில் ஜென்மத்தில் ராகு சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கை எழுத்துக்கள் போடாதீர்கள்.
இரண்டாம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் கரையும் சூழல் உருவாகும் பங்குச்சந்தை ட்ரேடிங் ஆன்லைன் வியாபாரங்களில் பணம் முதலீடுகள் தவிற்க்கவும்.
7.'ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் வரக்கூடும் அந்நிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் ஆன்மீகப் பயணங்கள் கோயில் தலங்களுக்கு சென்று வருவதால் நிம்மதியும் மன நிறைவும் கிடைக்கும்.
பிப்: 5,6,7 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானுக்கு அர்ச்சனையும். தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.