பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - மீனம்

By செய்திப்பிரிவு

புதன் பலம் பெற்று 11'மற்றும் 12-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள் தனது புத்திசாலித்தனத்தால் பணம் பொருள் ஈட்டுவீர்கள் வியாபார யுக்திகளை கையாளுவீர்கள் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் ஸ்டாக் மார்க்கெட் ஆன்லைன் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் கூட்டுத் தொழில்கள் செழிப்படையும்.

6-ம் வீட்டில் கேது இருப்பதால் திடீர் பண வரவுகள் உண்டாகும்.
புதிய வேலை வாய்புகளும் உருவாகும் பணியிடை மாற்றங்களால் மகிழ்ச்சி கொள்வீர்கள்.

சுக்கிரன் 11 மற்றும் 12-ம் இடங்களில் வலம் வருவதால் பெண்களால் நன்மைகள் உண்டாகும் கணவன் மனைவி உறவு பலப்படும்.புதிய வாகன யோகமும் சிலருக்கு புதுவீடு கட்டும் யோகமும் உண்டாகும்.

4-வீட்டில் குரு இருப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் தவிற்க்கவும்
வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.

பிப்ரவரி 13.ம் தேதிவரை சூரியன் பலம் பெற்று 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வார் இதனால் அரசாங்க அனுகூலங்கள் உண்டாகும்
வி.ஐ.பி களின் சந்திப்பும் உதவிகளும் கிடைக்கும்.

23- ம் தேதிவரை செவ்வாயும் முழு பலத்துடன் 11-ம் வீட்டில் இருப்பதால் தொழில் எதிரிகள் விலகுவார்கள் தொழில் போட்டிகள் குறையும் .
விளையாட்டு போட்டிகளில் சாதிப்பார்கள்.சகோதரர்களிடம் நல் இணக்கம் உண்டாகும்.

விரைய ஸ்தானமான 12-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் கவனம் தேவை.
சுப விரையமாக வீடு கட்டுவது, நிலங்களில் முதலீடு செய்வது
சிறப்பை தரும். தனியார் பைனான்ஸ் முதலீடுகள் தவிற்பது நல்லது.

ராசிக்குள் சனிபகவான் ஜென்ச்சனியாக அமந்து இருப்பதால் உடலில் அடிக்கடி உபாதைகள் வரக்கூடும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும்.

பிப்: 8,9.10 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடும் கோ சாலைகளில் உள்ள பசுக்களுக்கு தீவனமும் வழங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE