இன்றைய ராசி பலன்கள் - (22-01-2026 வியாழக்கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்
பிடிவாத போக்கால் பலரின் நட்பை இழக்க நேரிடும். அவரச முடிவுகளை தவிற்க்கவும்.பண தேவைகள் அதிகரிக்கும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள்.கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்
குடும்ப பிரச்சனைகள் அகலும். மனதில் உள்ள அலைச்சல் டென்ஷன் குறையும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்
குடும்ப சுமைகள் அதிகரிக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும்.உற்றார், உறவினர்களால் நன்மை உண்டு. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம்
மனமகிழ்ச்சி உண்டாகும். பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தேக ஆரோக்கியம் பலம் பெறும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே,மனக்குழப்பம் காணப்படும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி
இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். புதிய வாகன யோகம் உண்டாகும்.பணம் பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம்
குடும்ப நபர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். தடைகளை தகர்த்தெறியும் சாமர்த்தியம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.வியாபார விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்.
குடும்ப அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முடியும்.கணவன் மனைவி உறவு பலப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். ஆன்மீக நாட்டம் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு.
திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். தூர பயணங்களால் அலைச்சல் இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும் உடல்நல குறைபாடுகள் வரக்கூடும்.
புது தொழில் யோகம் அமையும்.

மகரம்.
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நடக்கும்
சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். எதிர்காலம் குறித்த யோசனை இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

மீனம்.
மனதிற்கு இதமான செய்தி வரும். பண விஷயங்களை கையாளும் போது கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE