அழுகிய தேங்காய், கொப்பரை தேங்காய், தேங்காய் பூ அபசகுனமா?

By செய்திப்பிரிவு

ஒரு சிலர் இவற்றை நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவார்கள்.
ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி என்பது யாருக்கெல்லாம் தெரியும்.

அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி.
ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும்
அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை,

கண்திருஷ்டி, ரோகம், துர் சொப்பனங்கள் ஆகியவை அனைத்தும் பிரார்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது..!

முழு கொப்பரையாக இருந்தால் சுபகாரியம் உண்டாகும், புத்திர பாக்யம் உண்டாகும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

அடுத்து, தேங்காயில் பூ இருந்தால் ரோக நாஸ்தி, எதிர்பாராத வரவு சொர்ண லாபம் ஏற்படும்.
அதனால், அழுகிய தேங்காயை யாரேனும் அபசகுணம் என்று கூறினால் நம்பாதீர்கள்..
உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்..

நீங்கள் உங்களையோ அல்லது இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடி சுபமாகவே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE