இன்றைய ராசி பலன்கள் (26-12-2025 வெள்ளி கிழமை)

By செய்திப்பிரிவு

மேஷம்

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.கோயில் தலங்களுக்கு செல்ல யோசனை தோன்றும். குடும்ப நலம் மேலோங்கும். நன்மை கிடைக்கக்கூடிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்

ரிஷபம்

மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பிரியமானவர்கள் நேச கரம் நீட்டுவர். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

மிதுனம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். புது வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.

கடகம்

குடும்ப பொருளாதார நிலை உயரும். கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெரிய மனிதர்களின் உதவிகளும் ஆதரவும் கிட்டும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் அகலும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு இருக்கும். கடன் தொந்தரவு ஓரளவு சீராகும். லாபகரமான தொழில் அமையும்,

புதிய முதலீடுகளால் நன்மைகள் உண்டாகும்.

கன்னி

குடும்பத்தில் பல நல்ல திருப்பங்கள் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். பண தட்டுப்பாடு நீங்கும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் உத்யோகம் அமையும்.வெளிநாடு வேலைக்கான முயற்ச்சிகள் தொடங்கலாம்.

துலாம்

குடும்ப பெருமை உயரும். நெருக்கமான ஒருவரை பிரிய நேரிடும். சொத்து வாங்குவது, விற்பது குறித்த யோசனை வரும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கூம் அடுத்தவர்கள் குடும்ப விவகாரத்தில் தலையிடாதீர்கள் உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிகம்

வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

உடல் நல குறைபாடுகள் தோன்றும். கணவன் மனைவி ஒற்றுமை பலம் பெரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.

தனுசு

குடும்ப வசதி, வாய்ப்புகள் பெருகும்.புதிய வாகன யோகம் அமையும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் மற்றும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகரம்

மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். எதிர்பாராத செலவுகள் வரும்.உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி பெறும்.

கும்பம்

நெருங்கிய உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பர்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் பணிசுமை கூடும்.

தொழில் வியாபாரங்கள் மந்தநிலை நீடிக்கும்.

மீனம்

குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் வரும். அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம்.வீண் கோபங்களால் சங்கடங்கள் வரும். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். உத்யோக மாற்றம் வரும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE