சடாரி வைப்பதால் பலன்கள்?

By நந்தா

பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்து சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.

சடாரி என்பது வடசொல் ஆகும்.
சடாரிக்கும், நம்மாழ்வாருக்கும் உள்ள தொடர்பை அறிவோம்.

ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.

மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.

சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.

அவற்றை நீக்கி அரியின் (இறைவனின்) பூர்ண அருள் பெரும் அம்சமாகவே சடாரி சார்த்தப்படுகிறது (சடம் + அரி = சடாரி).
அதில் இறைவனின் திருவடி பதிந்துள்ளதால் நாம் பூரணத்துவம் அடைகிறோம்.

வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் #நம்மாழ்வார்.
இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.

இவர் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் #மாறன் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

நான்கு வேதங்களையும் தீந்தமிழில் பாடியதால் "வேதம்
தமிழ் செய்த மாறன்" என்று புகழப்படுகிறார்.

இவர் திருமாலின் திருவடி அம்சமாகவே அவதரித்ததாகக் புராணங்களில் கூறப்படுகிறது.
அகவே சடாரி வைப்பது நம்மாழ்வார் ஆசியை பெறுவதாக ஐதீகம்.

எனவே சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது இறைவன் மற்றும் இறைவனின் சாயா சொரூபமான ஆழ்வார் ஆகியோரின் பூரண அருளைப் பெறலாம் என்பதில் மாற்றமில்லை.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE