இந்த ஆண்டு இரண்டு முறை குரு பெயர்ச்சி அடைகிறார் உங்கள் ராசியை பொருத்தமட்டில் இந்தாஆண்டு குருபகவான் நற்பலன்களை வாரி வழங்குவார் ஜூன் மாதம் 2-ம் தேதியும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியும் இரண்டு முறை குரு பெயர்ச்சி அடைய உள்ளதால் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம் தற்சமயம் ராசிக்கு 5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும் திருமண காரியங்கள் கைகூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஜூன் இரண்டாம் தேதி 6-ம் இடமான ருண ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அக்டோபர் 31-ம் தேதி மீண்டும் 7-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் ஏழாம் இடம் என்பது குரு பகவானுக்கு சிறப்பான இடமாகும் இதன் மூலமாகவும் பல நன்மைகள் நடக்கலாம் சொந்த வீடு கனவு நினைவு ஆகும் புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும் தொழில் வியாபாரம் விருத்தியை தரும் சேமிப்புகளும் உண்டாகும்.
2-ம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும் பண விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் தலையிட வேண்டாம் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.
ராசிக்குள் ராகுவும் ஏழாம் ஸ்தானத்தில் கேது இருப்பதால் மனக்குழப்பங்கள் உண்டாகும் உணவு விஷயங்கள் எச்சரிக்கையாக இருக்கவும் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள் மருத்துவம் விரைய செலவுகள் வரக்கூடும் பங்குச்சந்தை சூதாட்டங்களில் பணத்தை இழந்து விடாதீர்கள் சோம்பல் அதிகமாக காணப்படும் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாகும் பணியிடை மாற்றங்களால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவீர்கள் கவனம் தேவை.
பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும் கால்நடைகளுக்கு உணவு வழங்கி வாருங்கள் அமாவாசை அல்லது பௌர்ணமி திதி அன்று குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.