பொதுவாகவே வருட பலன் என்பது வருட கோள்களான குருபகவான் சனிபகவான், ராகு +கேது மையப்படுத்தி சொல்லக்கூடிய பலன்களாகும் இவ்வருடம் உங்கள் ராசிக்கு வருட கோள்கள் தரும் பலன் என்ன என்பதை காண்போம் 7-ம் இடத்தில் அமர்ந்த குருபகவான் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்களை நிகழ்த்தி வைப்பார் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பண சேமிப்புகள் உண்டாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் ஜூன் மாதம் 2-ம் தேதி மற்றும் அக்டோபர் 31-ம் தேதிகளில் இரண்டு முறை குருபெயர்ச்சி.
நடைபெறுகிறது ஜூன் 2-ம் தேதி அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை குரு அமர்ந்து சற்று மன குழப்பங்களை ஏற்படுத்துவார் அக்டோபர் 31-ம் தேதி 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சென்று நன்மைகளை திரும்பவும் வழங்கி வருவார்.
டிசம்பர் 5-ம் தேதிவரை ராகு ராசிக்கு 3-ம் இடத்தில் அமர்ந்து நன்மைகளை வழங்குவார் இதனால் தேக ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் வெளிநாடு வேலைவாய்ப்புகள் தேடுபவருக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் எதிர்பாராத பண வரவுகளால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.
ராசிக்கு 4-ம் இடத்தில் சன பகவான் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் வரக்கூடும் வீடு மனை மற்றும் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளில் கவனம் செலுத்தவும் எதிர்பாராத விரையங்கள் உண்டாகும் தாயாருக்கு உடல் நல குறைபாடுகள் வரக்கூடும் கவனம். ராசிக்கு 9-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் தந்தையாருடனும் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் புதிய மனிதர்களும் எச்சரிக்கையாக இருக்கவும் ஆடம்பர செலவுகளை குறைத்து பண சேமிப்பில் ஆர்வம் காட்டுங்கள்.
பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்க்கிழமைகளில் நவகிரக சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வரவும் பௌர்ணமி திதியன்று திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் நல்லதே நடக்கும்.