நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை?

By செய்திப்பிரிவு

நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.

அமிர்தகடிகை அல்லது அமிர்த நாழிகை. என்பது வியாதிக்கு மருந்து உண்ணும் நேரம்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதயமாகிறது.

ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.

ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது.
அந்த வகையில் அமிர்த நாழிகையை கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்க வேண்டும்.

அதில் இருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை, மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும்
மருந்து உண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல் இருக்கிறது.

எனவே அமிர்த நாழிகை தொடக்கம் முதல் முடிவு வரை 1½ மணிநேரம் இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால் கூட, அதன் மத்திம நேரத்தில் மருந்து உண்ணலாம்.
அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.

ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காக காத்திருக்க முடியாது.
அதே போல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்ண ஆரம்பிக்க அந்த நோய் பூரணமாக குணமாகும்.

மருந்து உண்ண வேண்டிய அமிர்த நாழிகை நேரம் வருமாறு:-
அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்
பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்
கார்த்திகை 50 முதல் 54 நாழிகைக்குள்
ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்
மிருகசீரிஷம் 30 முதல் 34 நாழிகைக்குள்
திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்
புனர்பூசம் 14 முதல் 18 நாழிகைக்குள்
பூசம் 16 முதல் 20 நாழிகைக்குள்
ஆயில்யம் 40 முதல் 44 நாழிகைக்குள்
மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
பூரம் 30 முதல் 34 நாழிகைக்குள்
உத்திரம் 33 முதல் 37 நாழிகைக்குள்
ஹஸ்தம் 7 முதல் 11 நாழிகைக்குள்
சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்
சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்
விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்
அனுஷம் 14 முதல் 18 நாழிகைக்குள்
கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்
மூலம் 14 முதல் 18 நாழிகைக்குள்
பூராடம் 10 முதல் 14 நாழிகைக்குள்
உத்திராடம் 14 முதல் 18 நாழிகைக்குள்
திருவோணம் 20 முதல் 24 நாழிகைக்குள்
அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்
சதயம் 20 முதல் 24 நாழிகைக்குள்
பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்
உத்திரட்டாதி 18 முதல் 22 நாழிகைக்குள்
ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்

இந்த கால நேரத்தில் மருந்து உண்டால், நோய்கள் விரைவில் பூரண குணமடையும் என்பது நமது சித்தர்கள் அருளிய இரகசியம் ஆகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE