2026 ஆங்கில புத்தாண்டு கன்னி ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி வரை ராகு பகவான் ராசிக்கு 6-ம் இடமான உப ஜெயஸ்தானத்தில் அமர்ந்து நல்ல யோக நிலைகளை வாரி வழங்குவார் இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும.் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும் மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். பண புழக்கம் நன்றாக இருக்கும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும்.

இப்ப வருடம் இரண்டு முறை குரு பெயர்ச்சிகள் நடைபெறுகிறது ஜூன் 2 மற்றும் அக்டோபர் 31-ம் தேதியும் தற்சமயம் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்த குரு சிறு சிறு தொழில் நஷ்டங்களும் கடன் சுமைகளும் தந்து கொண்டிருப்பார் ஜூன் 2-ம் தேதி ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார் அக்டோபர் 31-ம் தேதி வரை 11-ம் இடத்தில் அமர்ந்திருப்பார்.

இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உருவாகும் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெற முடியும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும் உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் பதவி உயர்வும் கிடைக்கும்.

ராசிக்கு 12-ம் இடமான விரைய ஸ்னத்தில் கேது அமர்ந்திருக்கிறார் இதனால் சற்று மன குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்படும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

ராசிக்கு 7-ம் இடமான கண்டக ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகளும் மனசாமங்கள் வரக்கூடும் ஈகோ தலை தூக்கும் குடும்ப உறவிகளுக்குள் விரிசல்கள் விழும் சொந்தக்காரர்களிடம் பண விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடும் அல்லது யோக நரசிம்மர் வழிபாடு செய்து வரவும புகழ்பெற்ற நரசிம்மர் ஆலய வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE