கார்த்திகை 2,3,4 ரோகிணி. மிருகசீரிஷம் 1,2-ம் பாதம்.
வருட பலன்கள் என்பது வருட கோள்களை வைத்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும் குரு சனி ராகு கேது நின்ற இடங்களை வைத்து பலன்கள் கணிக்கப்படுகிறது மாத பலன்கள் மாத கோள்களும் வருட கோளும் இணைந்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும் தினசரி ராசி பலன் என்பது சந்திரனை மையப்படுத்தி இதர கோள்களை வைத்து சொல்லக்கூடிய பலன்ங்கள் ஆகும்.
ஜூன் மாதம் 2-ஆம் தேதி வரை குரு பகவான் தனஸ்தானமான 2-ம் இடத்தில் இருந்து நற்பலன்களை வாரி வழங்குவார் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் திருமண தடைகள் நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தன சேமிப்புகள் உண்டாகும் ஜூன் 2-ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெறுகிறது ராசிக்கு 3-ம் இடத்துக்கு குரு செல்கிறார் இவ்வருடம் இரண்டுமுறை குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.
அக்டோபர் 31-ம் தேதி சிம்ம வீடான 4-ம் இடத்துக்கு செல்கிறார் 3 மற்றும் 4-ம் இடங்கள் அவ்வளவு உகந்த இடங்கள் அல்ல சற்று எதிர்மறையான பலன்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன சற்று கவனத்தை செயல்படவும்.
டிசம்பர் ஐந்தாம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது அதுவரையில் கேது ராசிக்கு 4-ம் இடத்திலும் ராகு 10-ம் இடத்திலும் பலன்களை வழங்குவார்கள்.
ராகு 10-ம் இடத்தில் அமர்ந்து யோக பலன்களை வழங்குவார் தொழில் வியாபாரம் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும் கேது 4-ம் இடத்தில் தீய பலன்களை தருவார் தாயாரின் உடல் நலத்துக்கு அடிக்கடி பிரச்சினைகள் வரும் மருத்துவ செலவுகள் உண்டாகும்.எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நன்று.
இவ்வருடம் முழுவதும் சனி பகவான் அதே 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும் கடன் சுமைகள் குறையும்.
பரிகாரம்:
வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் தேய்பிறை அஷ்டமி நாள் சிறந்த நாளாகும் பைரவ வழிபாடு நன்மைகளை தரும் நல்லதே நடக்கும்.