2026 ஆங்கில புத்தாண்டு பொது ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

2026 ஆங்கில புத்தாண்டு மார்கழி 17-ம் நாள் வியாழக்கிமை ரோகிணி நடசத்திரத்தில் பிறக்கிறது கன்னிகா லக்ன நேரத்தில் வருட பிறப்பு என்பதால் நாட்டில் நல்ல மழை விவசாய வளம் பெறும்.

மக்களிடம் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் புதிய வேலை வாய்புகள் உருவாகும். அரசியல் செல்வாக்கும் புதிய பொருளாதார கொள்கைகளும் உருவாகும்.

வெளிநாடு வர்த்தகம் சீரடையும் ஏற்றமதி தொழில்கள் மூலமாக பொருளாதார முன்னேற்றம் காணப்படும்.பங்குசந்தை முதலீடுகள் உயர்வு நிலைக்கு செல்லும். சுற்றுலாத்துறை மேம்படும். தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி பெறும்.

மக்களிடம் பரஸ்பர அன்பு குறையும் சுயநலம் அதிகமாகும். ஆடம்ர பொருட்களை வாங்க மக்கள் போட்டி போடுவார்கள். கடன் சுமைகள் கூடும்.

தொழில் போட்டிகள் அதிகமாகும் வரவுக்கேற்ப செலவகளும் உண்டாகும் செல்வந்தர்கள் செல்வத்தை சேர்ப்பார்கள். நடுவர்கத்தினர் செல்வத்தை கரைப்பார்கள். இயற்க்கை தனது வளத்தை தந்துக்கொண்டே இருக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE