இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர் 8, 2025 - திங்கட் கிழமை

By செய்திப்பிரிவு

மேஷம்

உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். நண்பர்கள் உங்களை பற்றி உயர்வாக பேசுவர். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

மிதுனம்

புதுமையான திட்டங்களை தீட்டி அதை வழிவகை செய்ய முடியும். இல்வாழ்வில் இனிமை கூடும். கொடுக்கல், வாங்கலில் உஷாராக செயல்படவும். தொழில் மாற்றத்தில் விருப்பம் ஏற்படும்.

கடகம்

குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய காரியங்கள் ஆதாயம் தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்

பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வெளி ஆதரவு பெருகும்.

கன்னி

பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தொந்தரவுகள் குறையும்.

துலாம்

ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியும், ஆதாயங்களும் பெருகும். புது வாகனம் வாங்கும் யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிகம்

குடும்பத்திற்கு பெரிய நன்மைகள் கிடைக்கும். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். கூட்டு தொழில் வியாபாரம் சிறக்கும்.
காலை 09:37 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.

தனுசு

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். புது சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். காரிய தடை விலகும். புது தொழில் யோகம் அமையும்.காலை 09:37 முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

மகரம்

எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பண வரவு சுமாராக இருக்கும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்பம்

அனுபவ அறிவை கொண்டு எதிலும் ஜெயிக்க முடியும். மனதில் இருந்துவந்த பயம் பதற்றம் நீங்கும். புதிய முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் கவனம் தேவை.

மீனம்
குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE