மீனம் டிசம்பர் 2025 ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

6-ம் இடத்தில் கேது இருப்பதால் மனமகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.
மாத பிற்ப்பாதி சூரியன் 10ம் இடத்துக்கு வருவதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும்.அரசு தேர்களில் வெற்றி கிடைக்கும்.

டிசம்பர் 20-ம் தேதிவரை சுக்கிரன் பலம் பெற்று 9-ம் இடத்தில் சஞ்சரிப்பார் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
பண தேவைகள் பூர்த்தியாகும்.

7- தேதிவரை செவ்வாய் 9-ம் வீட்டில் பலவீனமாக காணப்பட்டாலும் 7- தேதிக்கு பிறகு 10- ம் இடத்தில் நன்மைகளை வழங்குவார் தொழில் போட்டிகள் குறையும் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும்.

ராசிக்கு 9ம் இடத்தில் புதன் சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் இதனால் பண இழப்புகள் உண்டாகும் பங்குச்சந்தை டிரேடிங் போன்ற ஆன்லைன் வியாபாரங்கள் தவிர்ப்பது நல்லது.

12ம் இடமான விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பண விரையங்கள் உண்டாகும் அசுப விரையங்களை தவிர்க்க சுபச் செலவுகளாக வீடு மனை நிலங்களில் முதலீடு செய்வது நல்லது.தனி நபர்களை நம்பி பணம் கொடுக்கல் கூடாது.

ராசிக்குள் சனி ஜென்மச்சனியாக இருப்தால் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் வரக்கூடும் கணவன் மனைவிக்குள் ஈகோ தலை தூக்கும் உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. உடல் உபாதைகள் உண்டாகும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் காணப்படும்.

4,ம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் பண சேமிப்புகள் கரையும் சூழல் உருவாகும.

தேவை இன்றி கடன் வாங்குவதையும் தவிர்க்கவும்.
டிசம்பர் 15,16,17 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனையும் தேய்பிறை அஷ்டமி திதியன்று தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE