டிசம்பர் 10-மற்றும் 11-ம் இடங்களில் செவ்வாய் பலத்துடன் சஞ்சரிப்பதால் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும்.
தொழில் போட்டிகள் குறையும். எதிரிகள் தொல்லை விலகும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சூரியனும் 10 மற்றும் 11ம் இடங்களில் பலத்துடன் காணப்படுவதால் முகத்தில் பொலிவும் தேஜஸும் கூடும்
பெரிய மனிதர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும் அவர்களால் காரிய அனுகூலங்கள் உண்டாகும்.
தந்தை மகன் உறவு பலப்படும். இம்மாதம் புதனும் 10ம் இடத்தில் இருப்பதால் அறிவாற்றல் அதிகரிக்கும் மந்தநிலை மாறும்
திடீர் பண வரவுகளால் மனமகிழ்ச்சி காணப்படும்.
கூட்டு தொழில் மூலமாக நல்ல லாப பயனை அடையலாம். பங்குசந்தை .ட்ரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
குருபகவான் அதிசாரகதி முடிந்து டிசம்பர் 5-ம் தேதி வக்ரகதியில் 5 ம் இடத்துக்கு பின்னோக்கி மிதுனராசியான அதே இடத்துக்கு வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
பண தேவைகள் பூர்த்தியாகும்.
11-மற்றும் 12ம் இடங்களில் சுக்கிரன் இருப்பதால் அடிக்கடி விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள் சுப விரைய செலவுகள் உண்டாகும்.
ராசிக்குள் ராகு இருப்பதால் நிதானமும் கவனமும் மிக முக்கியம்.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும்.
இரண்டாம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் உண்டாகும்.
7-ம் இடத்தில் கேது இருப்பதால் அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகவும.்
யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.
தன விரையம் உண்டாகும் கவனம். டிசம்பர் ,13,14,15 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவான் வழிபாடும் கால்நடைகளுக்கு உணவும் வழங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.