கன்னி டிசம்பர் 2025 ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த டிசம்பர் மாதம் 3,மற்றும் 4,ம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை காணலாம் பண சேமிப்புகள் உண்டாகும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புதிய வீடு கட்டும் அமைப்பு உள்ளது வங்கி கடன் உடனடியாக கிடைக்கும்.

7-ம் தேதிவரை 3,ம் ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தரும் தொழில் எதிரிகள் விலகுவார்கள் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.7-ம் தேதிக்கு பிறகு 4-ம் வீட்டில் பலவீனப்படுகிறார்.

10-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் பண சேமிப்புகள் உண்டாகும்.தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடவேண்டாம் வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.

6ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் ராகுபகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் இதுவரை இருந்து வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் வாபஸ் ஆகும் தீர்ப்பு சாதகமாக அமையும்.

மாதம் ஒரு பாதி வரை சூரியன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசாங்க உதவிகளும் ஆதரவும் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும் பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும்.

டிசம்பர் 7-ம் தேதிக்கு பிறகு 3,ம் இடத்தில் புதன் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார்
நண்ர்கள் வட்டாரம் பெருகும் ஆடம்பர செலவுகள் செய்ய வேணடாம்.

12 கேது வீட்டில் இருப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் உறவினர்களிடம் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

7-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பதட்டம் காணப்படும் கணவன் மனைவிக்குள் சண்டைகள் வரக்கூடும் யாருக்கும் ஜாமின் கையொப்பம் இட வேண்டாம்.

டிசம்பர் 2,3,மற்றும் 29,30,31 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனையும்.

அமாவசை திதியன்று குலதெய்வ கேவிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE