கடகம் - டிசம்பர் 2025 ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த டிசம்பர் 16-ம் தேதி சூரியன் 5,ம் வீட்டில் இருந்து 6,ம் வீட்டுக்கு செல்வதால் நன்மைகள் உண்டாகும் பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும் அவர்களால் உதவிகள் கிடைக்கும் அரசாங்க ஆதரவும் அரசாங்கத்தால் அனுகூலங்களும் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும்.

செவ்வாய் டிசம்பர் 7-ம் தேதி வரை 5-ம் வீட்டில் பலவீனமாக காணப்பட்டாலும் பிறகு 6-ம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பார் இதனால் காரிய தடைகள் விலகும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

இம்மாதம் 7-ம் தேதிவரை புதன் 4,ம் வீட்டில் பலமாக காணப்பட்டாலும் பிறகு 5-ம் வீட்டில் பலவீனமாக சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் சோம்பலும் சுறுசுறுப்பின்மையும் காணப்படும்.

பண விவகாரங்களில் கவனம் தேவை. ராசிக்கு 2,ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் மருத்துவ செலவுகள் வரும் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

டிசம்பர் 20ம் தேதிவரை சுக்கிரன் 5-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வருவாய் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.
20-ம் தேதிக்கு பிறகு சுக்கிரன் 6-ம் இடத்துக்கு செல்கிறார் இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் மூன்றாம் நபர்களின் பேச்சைக் கேட்டு அவசர முடிவுகள் எடுக்காதீர்கள்.

ராகு 8-ல் இருப்பதால் ஜாமின் கைஎழுத்துகள் யாருக்கும் போடாதீர்கள் தேவை இன்றி கடன்கள் வாங்காதீர்கள்.
பங்காளிகளுக்குள் வீண் வம்பு வழக்குகள் உருவாகும் கவனம். 9-ம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் வேலை சுமை காரணமாக வேலையை வீடும் சூழலும் உருவாகும் கவனம்.

டிசம்பர் 25,26, சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும் .இம்மாததில் வரக்கூடிய எதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்
ஸ்ரீவாஞ்சியம் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE