ராசிக்கு 3,ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோவில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள்.
சனிபகவான் 10 ல் இருப்பதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.
மாத முற்பாதி சூரியன் பலம் பெற்று 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசாங்க அனுகூலங்கள் ஆதரவுகள் கிட்டும்.
பெரிய மனிதர்கள் உதவி செய்வார்கள்.வீடு மனை நிலங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.
7-ம் தேதி வரை மட்டுமே செவ்வாய் 6-ம் வீட்டில் பலபடுகிறார் பிறகு 7-ம் வீட்டுக்கு செல்வதால் முன் கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம்.
சகோதர்களிடம் விட்டுகொடுத்து போவது நலம். 9ம் வீட்டில் ராகு இருப்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் இருக்கும்.
இம்மாதம் புதன் ,6,7 -ம் வீடுகளில் புதன் சஞ்சாரம் செய்கிறார்.
6-ம் வீடு மட்டுமே பலமாக இருக்கும் டிசம்பர் 7-ம் தேதிவரை பலப்படுகிறார் பிறகு 7,ம் வீட்டில் பலவீனம் அடைகிறார் ஞாபக மறதி பண விரையங்கள் உண்டாகும்.
6 மற்றும் 7-ம் இடங்களில் சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் மன சஞ்சலம் உண்டாகும் வீண் வதந்திகளை நம்பாதீர்கள்.
வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.கணவன் மனைவிக்குள் சண்டைகள் வரக்கூடும் கவனம்.
குரு அதிசாரகதி முடித்து திரும்பவும் வக்ரகதியாக குருபகவான் ராசிக்குள் வந்திருப்பதால் ஆடம்பர செலவுகளை தவிற்க்கவும்.
டிசம்பர் 23,24 சந்திராஷ்டமம்.
பரிகாரம் !
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் யோக நரசிம்ம வழிபாடு
செய்து வரவும் நல்லதே நடக்கும்.