ரிஷபம் - டிசம்பர் 2025 ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

இந்த டிசம்பர் மாதம் சனிபகவான் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து யோக நிலைகளை வாரி வழங்குவார் கடன் சுமைகள் குறையும் தொழில் வருமானம் நன்றாக இருக்கும்.

ராசிக்கு 10-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் திடீர் பண வரவுகள் உண்டாகும் பங்குசந்தை ட்ரேடிங்கில் லாபம் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்புகள் தேடிவரும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.

டிசம்பர் 4-ம் தேதி குருபவான் அதிசார பயணம் முடித்து வக்ரகதியாக புனர்பூசம் 3,ம் பாததுக்கு திரும்ப வந்து உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்க்கு வந்திருப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் பணம் நகை சேமிப்புகள் உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

புதன் டிசம்பர் 7-ம் தேதி அஷ்டம ஸ்தானமான 8-ம் வீட்டுக்கு செல்கிறார் இதனால் சுறுசுறுப்பாக காணப்படும் நிலுவையில் இருந்த வேலைகள் விரைந்து முடிப்பீர்கள்.

நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

டிசம்பர் 20-ம் தேதிவரை சுக்கிரன் 7-ம் வீட்டில் பலவீனப்படுகிறார். வண்டி வாகனங்கள் செலவு வைக்கும் பெண்களால் அவப்பெயர் உண்டாகும்.

உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

இம்மாதம் செவ்வாய் 7-மற்றும் 8-ம் வீட்டில் பலவீனப்படுவதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் அவரச புத்தியால் சில இழப்புகள் உண்டாகும்.
இம்மாதம் சூரியனும் பலவீனமாக தென்படுவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் பெரிய மனிதர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

கேது 4-ம் வீட்டில் இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
டிசம்பர் 20,21,22 ம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடும் மஹாலட்சுமி விரதமும் இருந்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE