மேஷம் - டிசம்பர் 2025 ராசி பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷ ராசி நண்பர்களே, இந்த டிசம்பர் மாதம் ராகு பகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் மகிழ்ச்சி உண்டாகும் பணவரவுகள் நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் சிலருக்கு வெளிநாடு வேலைகள் கிடைக்கக்கூடும்.

இம்மாதம் 7-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை புதன் 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து யோக நிலைகளை வாரி வழங்குவார் இதனால் திடீர் பணவரவுகள் உண்டாகும் பங்குச்சந்தை நல்ல லாபத்தை தரும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்ட முடியும்.
வருட கோள்களில் குரு பகவான் 3-ம் இடத்தில் இருப்பதால் வீண் விரைய செலவுகள் உண்டாகும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும்.

டிசம்பர் 20-ம் தேதிவரை சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பதால் அடிக்கடி விருந்துகளில் கலந்து கொள்வீர்கள் உல்லாச பயணங்கள் மேற்கொள்ளுவீர்கள்.
5-ம் இடமான புத்திர ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தந்தை மகன் மகள்களுக்குள் வீண் வாக்குவாதங்கள் உருவாகும் ஒரு சில சண்டைகளும் வரக்கூடும் விட்டுக் கொடுத்துப் போவதால் நன்மைகளை காணலாம்.

இம்மாதம் சூரியன் 8 மற்றும் 9,ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இம்மாதம் செவ்வாயும் 8- மற்றும் 9-ம் இடங்களில் பலவீனப்படுவதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் யாரையும் எடுத்து இருந்து பேசாதீர்கள் சகோதர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.

டிசம்பர் 2,3, மற்றும் 29,30.31 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது.

பரிகாரம்.
வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று துர்கை அம்மன் விரதமும் அம்மனின் அவதார வழிபாடுகளும் பெண் தெய்வ வழிபாடுகளும் செய்வதால் நன்மைகள் நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE