மலச்சிக்கலை போக்கும் வஜ்ராசனம்

By saravanan

மலச்சிக்கலுக்கு உண்ணும் உணவு மட்டுமே காரணியல்ல,நம் உடலும்தான். உண்பதகேற்ற உடலுழைப்பு அவசியம்.

உடலுழைப்பு இல்லையேல்,உண்பது எவ்வாறு ஜீரணமாகும்..?

வீட்டில்,அலுவலகத்தில் அமர்வது நாற்காலி, சோபா..?

உண்பது டைனிங் டேபிள்..?

படுத்துறங்குவது மெத்தை கட்டிலில்..?

கழிப்பறையில் வெஸ்டர்ன் கழிவறை..?

(இதில் எங்கே மலக்குடல் அழுத்தம்பெறும்)

எல்லாமே நாகரிகம் என்ற பெயரில் உடலை சுகப்படுத்திவிட்டோம். இனியாவது தரையில் அமர்ந்து பழகலாமே.

அவ்வாறு அமரும்போது குறைந்தபட்சம் படத்திலுள்ள எளிய ஆசனமுறையில் அமர முயற்சிக்கலாமே..!

சாப்பிட்ட பின்பும் செய்யும் ஒரே ஆசனம் வஜ்ராசனம்.இதில் எவ்வளவு நேரம் அமரமுடியுமோ அமருங்க..ஜீரணித்தல் எளிதில் நடக்கும்.

#பத்மாசனம் -இதிலும் அமரலாம். டீவி பார்த்தல் புத்தகம்,நியூஸ்பேப்பர் வாசித்தல் போன்ற சமயங்களில் செய்யலாம்.

பத்மாசனம் போட இயலாதோர் அர்த்தபத்மாசனம் போடலாம். #கோமுகாசனம் -இவ்வாசனம் செய்ய, செய்ய சுகமாக இருக்கும்.

விராசனம்-வஜ்ராசனா குதிகால்கள் மேல் அமர்வதெனில், விராசனம் இரு குதிகால்களுக்கிடையில் அமர்வது.

#சுகாசனம்-இது வேறொன்றும்மில்லை சம்மணம் போட்டு அமர்வதுதான். #சித்தாசனம் -நிச்சயம் இவ்வாசனம் உங்களுக்கு சுகமான ஆசனமாக இருக்கும்.
இந்த எளிய ஆசனங்களை தினமும் செய்துவர மலச்சிக்கல், அஜீரணம்,

வாயு,நெஞ்சுகரித்தல்,போன்றவை தீரும்ங்க..

கழிவுகள் தினமும் வெளியேறினால்,ஆரோக்கியம் மேம்படும்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை...

மேற்கூறிய ஆசனமுறைகளில் முதுகெலும்பு வளையாம பாத்துக்கோங்க..

.
மேலும்