ரவா மில்க் ஸ்வீட் செய்வது எப்படி?

By Senthil

இன்று சுவையான ரவா மில்க் ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் தேவையான அளவு பிஸ்தா, முந்திரியைப் பொடியாக நறுக்கி, சிறிதளவு நெய்யில் வறுத்துவைக்கவும்.

ஒரு கப் ரவையை லேசாக வறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ரவை, 2 கப் சர்க்கரை, 3 கப் பால், ஒரு கப் நெய் சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி கரைத்த ரவைக் கலவையைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பிறகு தீயைக் குறைத்து, சிறு தீயில் நன்கு கிளறிக்கொண்டே கோவா சேர்க்கவும்.

15 நிமிடங்களில் நெய் பிரிந்து வரும் பக்குவத்தில் 10 சொட்டு ரோஸ் எசென்ஸ், சாரைப் பருப்பு, பிஸ்தா, முந்திரி தூவி அடுப்பை அணைக்கவும்.
பின்னர், மூடி போட்டு அந்தப் பாத்திரத்திலேயே ஒரு மணி நேரம் வைத்திருந்து நெய் தடவிய ட்ரேயில் பரப்பி, விருப்பப்பட்ட வடிவில் கட் செய்து துண்டுகளாக்கவும். இப்போது சுவையான ரவா ஸ்வீட் ரெடி

.
மேலும்